தமிழ்ப் பாடல்களை 24 மணி நேரமும் எப்.எம். ரேடியோ நிலையங்களிலிருந்துதான்
கேட்க வேண்டியதில்லை. இணையத்தில் பல எப்.எம். ரேடியோ நிலையங்கள்
இயங்குகின்றன. 24 மணி நேரமும் இவற்றைக் கேட்கலாம். இன்டர்நெட் இணைப்பில்
இருந்தால் இவற்றைப் பின்னணியில் ஓடவிட்டு இசையை ரசித்துக் கொண்டே
கம்ப்யூட்டரில் நம் பணியை மேற்கொள்ளலாம். எந்த வகைப் பாடல் வேண்டுமோ
அதற்கேற்றபடி தேர்ந்தெடுக்க பல தளங்கள் உள்ளன. இவை எல்லாவற்றையும்
பார்க்க http://www.tamilfms.com/ என்ற இணைய தளத்திற்குச் செல்லவும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் இணைய பண்பலை ஒளிபரப்பு நிலையங்கள் இரு
பக்கங்களிலும் பக்கத்திற்கு 25 ஆக 50 நிலையங்கள் தரப்பட்டுள்ளன. நீங்கள்
பயர்பாக்ஸ் பயன்படுத்துபவராக இருந்தால் ப்ளக் இன் டூல் ஒன்றினை இறக்கிப்
பதிந்த பின் இந்த எப்.எம். தளங்களுக்குச் சென்று பாடல்களைக் கேட்கலாம்.
விண் ஆம்ப் புரோகிராம் மூலமாகவும் இந்த எப்.எம். நிலையங்களின் பட்டியலைப்
பெற்று பாடல்களைக் கேட்கலாம். அங்கு சென்று View மெனுவில் Media Player
என்பதில் கிளிக் செய்திடவும். பின் கிடைக்கும் மெனுவில் Shoutcast Radio
என்பதில் கிளிக் செய்து அதில் உள்ள சர்ச் விண்டோவில் Tamil என டைப்
செய்து அழுத்தினால் தமிழ் எப்.எம்.நிலையங்கள் கிடைக்கும். இதில் நீங்கள்
விரும்பும் தளத்தினைத் தேர்ந்தெடுத்து கேட்கலாம். இதே போல வீடியோ
தளங்களும் கிடைக்கின்றன http://www.tamilfms.com/2009/01/minnal-tv.html
என்ற இணைய தளத்திற்குச் செல்லவும்.





